| சங்கத்தில், பொங்கல்,தமிழ்ப் புத்தண்டு, திருவள்ளுவர் நாள் விழா, சனவரி 30,31 நாள்களில் "குறளியக் கவிதைத் திருவிழாவாக"ச் சிறப்புறக் கொண்டாடப்பட்டது.
தமிழ்ச் சங்கத்துடன், தமிழ் எழுத்தாளர் கழகம். கவிக்கொண்டல் இலக்கியத் திங்கள் இதழ் இணைந்து நடத்திய இந்த விழாவில், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை பகுதிகளில் இருந்து னூற்றுக்கும் மேற்பட்ட பாவலர்கள் திருக்குறளின் சிறப்புகள் குறித்துத் தம் பாடல்களைப் படைத்தனர்.
பெங்களுர்த் தமிழ்ச் சங்கச் செயற்குழுவினருடன்,பாவலர் கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன், பாவலர் யுவராஜ் அமிழ்தன், பாவலர் வ. மலர்மன்னன் ஆகியோரும் சிறப்புற விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு மு.மீனாட்சிசுந்தரம் தலைமையேற்றார். திரு செங்குட்டுவன் கவியரங்கத் தலைமையேற்றார்.
விழாவில் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார், "நன்றறி உள்ளத்துச் சான்றோர்" எனப் பட்டமளிக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பெற்றார்.
வி.ஜி.பி.குழுமங்களின் தலைவரும் வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கவியரசர், செவாலியே வி.ஜி.சந்தோசம் வாழ்த்துரை, பாராட்டுரை, நிறைவுரை ஆற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட பாவலர்கள் அனைவருக்கும்சிறப்புப் பரிசுகள் வழங்கப்பெற்றன.
சங்கச் செயலாளர் திரு கோ.தமோதரன் நன்றி கூறினார். |