Home Sitemap Contact us
   

 
   
About Tamil Sangam Activities Committee Members Gallery Ootru School wings Treatment
  • Matrimonial
  • Tamil Class
  • Kannada Class
  • Yoga Class
  • Karate Class
Read more.
  • Activities for Ladies
  • Beauti Tips
  • Health Tips
  • Recipes
  • Share Knowledge
Read more.
  • Rymes
  • Quiz
  • General Knowledge
  • Child Recipes
  • Painting-Drawing
Read more.

செயற்பாடுகள்

திருமண மேடை (MATRIMONIAL): தமிழர் தன் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும் வகையில், தம் மக்களுக்குத் தகுந்த இணைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் திருமண மேடைத் துறை இயங்கி வருகின்றது.

சங்கத்தின் “திருமண மேடை”யில் தங்கள் மக்களின் பெயரைப் பதிவு செய்ய விரும்புவோர், தங்கள் மக்களுக்குரிய விளக்கங்களை அதற்குரிய விண்ணப்பப் படிவத்தில் நிரப்பி அளித்து பதிவுக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களின் குறிப்புகள் ஒளிப்படத்துடன்(Photo) சங்கத் திங்களிதழ் ஊற்றில் ஒரு முறை மட்டும் வெளியிடப்படும்.

பிரிவு அடிப்படையில் கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கோப்புகள், சாதி தடையில்லை என்பவர்களுக்கும் தனி கோப்புகள், மனமுறிவு பெற்றவர்களுக்குத் தனி கோப்புகள் உண்டு.

பதிவு செய்தோர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் ஞாயிறு காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் அவரவர்களுக்குத் தேவையான கோப்புகளைப் பார்வை இடலாம். உரியத் தேர்வு அமையுமாயின் அது குறித்த விளக்கங்களை திருமண மேடைப் பொறுப்பாளர்கள் அளிப்பார்கள். பதிவு செய்யாதவர்கல் கோப்புகளைப் பார்வையிட இயலாது.

பெற்றோர்கள் விரும்புகின்றவர்களுடைய குறிப்புகள், தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அளிப்பதுடன் சங்கத்தின் கடமை முடிந்துவிடுகிறது. வேறு எந்தப் பொறுப்பினையும் சங்கம் ஏற்காது.

தேவையான ஆவணங்கள்:

  • ஒரு POST CARD அளவுள்ள ஒளிப்படம்; இரண்டு PASSPORT அளவுள்ள ஒளிப்படங்கள்.

    (PHOTOS)


  • பிறந்த நாள் சான்று (SSLC TC நலம்)


  • சாதிச் சான்றிதழ்


  • சாதகத்தின் படி


  • உயர் கல்விச் சான்றிதழ்


  • தொழில் சான்றிதழ்


  • மணமுறிவு பெற்றவர்கள் என்றால் அதற்குரிய நீதிமன்ற ஆவணங்கள்


  • வாசகர் வட்டம்(READERS” FORUM): ஒவ்வொரு திங்களும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் “வாசகர் வட்டம்” நிகழ்த்தப்படுகிறது. சங்க உறுப்பினர்களும் பிறரும் தம் திறமையை வெளிப்படுத்தும் முறையில் தலைப்புகள் கொடுக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்கள், சமூக நிலைகள், வாழ்க்கைத் தேவைகள், தமிழர் விழாக்கள் குறித்த தலைப்புகள் ஆய்வு நோக்கில் தரப்படுகின்றன. நல்ல வரவேற்புடன் கூடிய நிகழ்ச்சியாக இது திகழ்கிறது.

    ஏரிக்கரை பாட்டரங்கம்(LAKEVIEW POETS” FORUM): ஒவ்வொரு திங்களும் நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் சங்க உறுப்பினர்களும் பிறரும் தம் பா இயற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் தலைப்புகள் கொடுக்கப்பெற்று ஏரிக்கரைப் பாட்டரங்கம் நிகழ்த்தப்பெற்று வருகின்றது. மக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு தம் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றுத் திகழ்கிறது.


    Readere's Forum:

    Sangam conduct 'Readeres Forum' every month with topics covering various subjects from Literary to social fecilitating the member to express their opinins freely and framely. Memberes use this forum to express their analytical views and improve their skills

    Lakeside Poet's Forum:

    This forum was strated twenty years back to encourage Tamil poets not onkly form Kartnataka but also from Tamilnadu to present thier poetized skills. In this monthly programme several people from different walks of life participated and get benefited.Different kinds of Literacy meetings,Literarydebates,poet's forums,felicitation of scholars,social gathering.birthday celebrations of eminent personalities, pongal, Independence day ,Republic day, Karanataka Rajyothsava celebrations are conducted regularly.Emment persons from different walks of life from Tamilnadu,Karnataka and all India levels Partizipated in this function..

    Library:

    Sangam's Library contains more than 40,000 books in Tamil, English, Kannada, Hindhi Covering wide range of topics(viz)Sangam Litera.

    Matrimonial:

    Sangam runs the matrimonial section for the benefit of Tamil living in Karnataka. Open Matrimonial meet is arranged every month for the benefit of registered members enabling them to have direct inaction with each other.

    Publications:
    Ootru

    Sangam publishes the journal Ootru every month carrying Sangam's activities notification, programs and also literacy articles. Souvenirs , special souvenirs are published to mark special occasions.

    Endowments:

    More than sixty endowments in the name of literacy genius have be in establish by Sangam and well wishers of Sangam. Well wishers have establish endowments in the memory of this Tamil members also.

    Endowments on the name of:

    Thiruvalluvar, Bharathiyar,Thiru.Vika, Bharathidhasan, Pavanan, Maraimalai Adigal,Vallalar, Nachimuthu Gounder, Lord Muruga, Periyar E.V.R, Arigar Anna, Kalaingar Karunanithi, Thanikasalam, Venkatasalam, A.M.Dharmalingam, Kamarajar, K.A.P.Viswanathan, Hariraman and in the names of the family members namely periyappa Thayarammal Achudhan, B.M.Raja. Saraswathy Ramanathan, Dr.M.V.Jayaraman, C.M.Gopalakrishnan,Amidhalingam, N.Thennavan, N.R.Govintharaju, T.M.T.Janakiyammal, T.K.V.Vaithilingam, Jayalakshmi, Muthuselvam, Vasantha, Muthukaruppan, Radha, N.Neelakandan, Thangam.Ramachandra, Mahalakshmi, Murugusubramaniyan, Sarangadasan, Karpagam Thiyakarajan, Sowcar Janaki, S.KSwaminathan, P.C.Ramachandran, A.T.Manohar are functioning. Through this endowments company arranges literacy programs publications, help to needy students of Kamarajar High school and other students.

    All rights reserved.Bangalore Tamil Sangam Designed & Maintained By Tranz Networkz